நியாய விலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்ய வசதி – அமைச்சர் பெரியசாமி

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நியாய விலைக்கடைகளில் பரீட்சார்த்த முறையில், ஐ.ஓ.சி. நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலைக்கடைகளை மாதிரி நியாய விலைக்கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.