பாஜ ஆளும் மாநிலங்களில் அசுர வேகத்தில் வளர்ச்சி திட்டம்: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு

திருவனந்தபுரம்: கேரளாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று மாலை கொச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், விமான நிலையம் அருகே நடைபெற்ற பாஜ கூட்டத்தில் மோடி பேசியதாவது: ஏழைகள், தலித் மக்கள் முன்னேற்றம்தான் பாஜ.வின் லட்சியம். கேரளாவில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. கேரளாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி 2 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பாஜ ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பணிகள் மிக அசுர வேகத்தில் நடக்கின்றன. இந்த மாநிலங்களில் இரட்டை இன்ஜின் அரசு செயல்படுகின்றன. கேரளாவிலும் பாஜ அரசு அமைத்தால், இதுபோன்ற வளர்ச்சியை இங்கும் காணலாம். பாஜ மீது கேரள மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். விரைவில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், மாலையில் கொச்சி விமான நிலைய  அரங்ககில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி  வைத்தார்.

* பூலித் தேவனுக்கு புகழாரம்
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘வீரமிக்க பூலித்தேவன் பிறந்த நாளில் அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். அவரது வீரமும், உறுதியும் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. முன் வரிசையில் நின்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்தவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.