பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக, லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஏராளமானோர் போட்டியிட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் இறுதி கட்டத்திற்கு சென்றனர்.
இதை அடுத்து, பிரிட்டன் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக, லிஸ் டிரஸூக்கு ஆதரவு அதிகரித்தது. அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளிலும், லிஸ் டிரஸூக்கு ஆதரவு பெருகி கொண்ட சென்றது. இதற்கிடையே, பிரட்டன் பிரதமர் தேர்தலில் தனக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக, வெளிப்படையாக, ரிஷி சுனக்கே தெரிவித்தார்.
Gotabaya Rajapaksa: நாளை இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே?
இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக, லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலையுடன் வாக்குப்பதிவு முடிவடைய உள்ளது. இதில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர், லிஸ் டிரஸூக்கு வாக்கு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 5 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
குறிப்பாக வரிக்குறைப்பை மையப்படுத்தி தேரதல் பிரசாரத்தில் ஈடுபட்ட லிஸ் டிரஸூக்கு தான் ஆதரவு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டன் நாட்டில் அடுத்த பொதுத் தேர்தல் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.