இலங்கை வீரர் குசால் பெரேரா தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்
32 வயதாகும் குசால் பெரேரா 107 ஒருநாள் போட்டிகளிலும், 60 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குசால் பெரேரா விரைவில் குணம் பெற்று வர வேண்டும் என இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பதிவிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் பல போட்டிகளை தவறவிட்டார்.
தற்போது அவருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
PC: PTI
அவர் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை மற்றோரு இலங்கை வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் வேகமாக உடல்நலம் தேறி வர வாழ்த்துக்கள் வீரரே என குறிப்பிட்டுள்ளார்.
PC: AFP