தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்ப்பில் வெளியான படம் ஆச்சார்யா 2. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது. இந்தச் சூழலில், தெலுங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ஆச்சார்யா படத்தின் தோல்வி குறித்து பேசுகையில், “கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, திரையரங்குகளுக்கு வருபவர்கள் குறைந்துவிட்டார்கள் என்ற கவலை உள்ளது. ஆனால் மக்கள் ஒட்டுமொத்தமாக திரையரங்குகளுக்கு வர விரும்பவில்லை என்று இதற்கு அர்த்தமல்ல.
மேலும் படிக்க | லைஃப் என்றால் ரோலர் கோஸ்டர் போல – மீனா வெளியிட்ட வீடியோ வைரல்
திரைப்படங்களின் கன்டென்ட் நன்றாக இருந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு வருகிறார்கள். பிம்பிசாரா, சீதா ராமம் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற படங்கள் இந்த ட்ரெண்டுக்கு சமீபத்திய சிறந்த எடுத்துக்காட்டுகள். எனவே சினிமாவில் உள்ள நாம் இனி நல்ல திரைக்கதை மற்றும் நல்ல உள்ளடக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி கவனம் செலுத்தவில்லை என்றால், பார்வையாளர்கள் நமது படங்களை நிராகரிப்பார்கள்.
சினிமாவின் தத்துவம் மாறிவிட்டது. நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதுதான் முக்கியமானது. மோசமான படங்கள் வெளியான இரண்டாவது நாளிலேயே நிராகரிக்கப்படுகின்றன.
இந்த ட்ரெண்டுக்கு நானே சாட்சி. சமீபத்தில் வெளியான எனது படம் கூட திரையிட்ட 2வது நாளிலிருந்து நிராகரிக்கப்பட்டது” என்றார். முன்னதாக, விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் வெளியான லைகர் படமும் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து பேசியிருந்த நடிகை சார்மி, “ரசிகர்கள் வீட்டில் இருந்தவாறே நல்ல கதைகள் கொண்ட படங்களையும் பெரிய பட்ஜெட் படங்களையும் ஒரே க்ளிக்கில் பார்க்கும் நிலை தற்போது இருக்கிறது. அவர்களை உற்சாகப்படுத்தும்படி படங்கள் வெளியானால்தான் அவர்கள் திரையரங்குக்கு வருவார்கள்” என கூறியிருந்தார்.