மோடிக்கு எதிரா கேஸ் போட்ட அமெரிக்க டாக்டர்… கடைசியில இப்படி ஆகிடுச்சே!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் நகரைச் சேர்ந்த லோகேஷ் வய்யுரு, இந்திய வம்சாவளி டாக்டர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இரைப்பை குடல் சிகிச்சை பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்படியென்ன வழக்கு, அதிரவைக்கும் அளவிற்கு என்னென்ன குற்றச்சாட்டுகள் போன்ற விஷயங்கள் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதாவது, பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தொழிலதிபர் அதானி, உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் க்ளாஸ் ஷ்வாப் ஆகியோர் இந்தியாவில் பெரிய அளவில் ஊழல்கள் செய்துள்ளனர்.

அடடா… அமைச்சர்னா இப்படியில்ல இருக்கணும்!

இதன்மூலம் ஈட்டப்பட்ட பணத்தை அமெரிக்காவிற்கு பரிமாற்றம் செய்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி அரசியல் ரீதியாக எதிர் நிலையில் இருப்பவர்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்டு பல்வேறு தகவல்களை பெற்றுள்ளனர். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே சென்றுள்ளார். இந்த வழக்கு கடந்த மே மாதம் 24ஆம் தேதி கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்னர் ஜூலை 22ல் சம்மன் அனுப்பப்பட்டு, அது ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அளிக்கப்பட்டது. சம்மன் அளிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை கடந்த மாதம் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் டாக்டர் லோகேஷ் வய்யுரு தாக்கல் செய்தார். கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, டாக்டர் லோகேஷ் வய்யுருவிற்கு எதிராக ரவி பத்ரா என்ற வழக்கறிஞர் ஆஜரானார்.

எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாதிடுகையில், டாக்டர் லோகேஷிற்கு வேறு வேலை இல்லை. நேரத்தை எப்படி கழிப்பது என்று தெரியாமல் இப்படியொரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். லோகேஷ் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆவணங்களும் சமர்பிக்கவில்லை.

இதெல்லாம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். அமெரிக்காவின் நட்பு நாடு இந்தியா. இப்படிப்பட்ட சூழலில் சம்மந்தம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். நம்பகத்தன்மை இல்லாத இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.