கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் என்னை அறிந்தால். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். அவர் ஏற்றிருந்த விக்டர் கதாபாத்திரம் அருண் விஜய்க்கு கம்பேக் என்றே சொல்லலாம். பல வருடங்களாக கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் அருண் விஜய்யை இந்தப் படத்துக்கு பிறகு பலரும் கவனிக்க ஆரம்பித்தனர்.
அதனையடுத்து அவரும் வரிசையாக படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் அவர் நடித்த யானை படமும், தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றன.
இந்தச் சூழலில் அவர் ஜி.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் சினம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பல்லக் லால்வாணி, காளி வெங்கட் உள்ளிட்டோரும் இதில் நடித்திருக்கின்றனர். படம் செப்டம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், மதுரையில் சினம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருண் விஜய், “ஒவ்வொரு மனிதருக்கும் சினம் வரும். இந்தப் படத்தில் கோபத்திற்கான ஞாயம் குறித்து பேசப்பட்டுள்ளது. பெண்கள் மத்தியில் இத்திரைப்படம் வரவேற்பை பெறும். நெல்லை வட்டாரம் சார்ந்த படத்தில் நடித்துள்ளேன்.
Million+ views for #Sinam trailer
https://t.co/93mbIp5BED#SinamfromSept16 @MSPLProductions @gnr_kumaravelan #Vijaykumar #PallakLalwani @kaaliactor @gopinath_dop @ShabirMusic @madhankarky @Muzik247in @DoneChannel1 @CtcMediaboy @silvastunt pic.twitter.com/ZCtPuVVsAw— ArunVijay (@arunvijayno1) September 2, 2022
நீண்ட நாள்களாக மதுரையை பின்னணியாக கொண்ட கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கூடிய விரைவில் அது நிறைவேறுமென்று நம்புகிறேன்.
விக்டர் கதாபாத்திரம் போல் மீண்டும் ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் அஜித் போன்ற முன்னணி நாயகருடன் நடிக்க தயார். சொந்த தயாரிப்பில் நடிப்பது கடினம்தான். ஆனால் நல்ல படம் கொடுக்கிறோம் என்ற மகிழ்ச்சி இருக்கிறது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களை எங்கள் தயாரிப்பு நிறுவனம் விரைவில் தயாரிக்கும்” என்றார்.