ஸ்டார்பக்ஸ் புதிய இந்திய சிஇஓ லக்ஷ்மன் நரசிம்மன் சம்பளம் என்ன தெரியுமா..?

உலகளாவிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் அதன் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மனை நியமித்துள்ளது, ஹோவர்ட் ஷூல்ட்ஸ், ஏப்ரல் 2023 வரை நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக நீடிப்பார்.

லக்ஷ்மன் நரசிம்மன் அக்டோபர் 1, 2022 அன்று லண்டனில் இருந்து சியாட்டிலுக்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்து தனது பணிகளை ஸ்டார்பக்ஸ் சியாட்டில் தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்க உள்ளார்.

ஸ்டார்பக்ஸ் பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு இருக்கும் லக்ஷ்மன் நரசிம்மன் சம்பளம் என்ன தெரியுமா..?

ஸ்டார்பக்ஸ்-ன் புதிய சிஇஓ லக்ஷ்மன்.. இந்தியர் கையில் மற்றொரு அமெரிக்க நிறுவனம்..!

லக்ஷ்மன் நரசிம்மன் சம்பளம்

லக்ஷ்மன் நரசிம்மன் சம்பளம்

ஸ்டார்பக்ஸ் அமெரிக்கப் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி லக்ஷ்மன் நரசிம்மன் ஒரு வருடத்திற்கு அடிப்படை சம்பளமாக 1.3 மில்லியன் டாலர் அளவிலான சம்பளத்தைப் பெறுவார், இதைத் தொடர்ந்து 1.5 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பணமாகச் சைனிங் போனஸ் ஆகப் பெறுவார்.

பங்கு கொடுப்பனவு

பங்கு கொடுப்பனவு

இதுமட்டுமா லக்ஷ்மன் நரசிம்மன் Reckitt Benckiser நிறுவனத்தில் பணியாற்றிய போது கிடைத்த சலுகைகளுக்கு ஈடு செய்ய ஸ்டார்பக்ஸ் பங்கு கொடுப்பனவாகச் சுமார் 9.25 மில்லியன் டாலர் பெற உள்ளார்.

 13.6 மில்லியன் டாலர்
 

13.6 மில்லியன் டாலர்

2023 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் லக்ஷ்மன் நரசிம்மன் சுமார் 13.6 மில்லியன் டாலர் அளவிலான வருடாந்திர பங்கு விதிப்புகளைப் பெற தகுதி அடைவார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 55 வயதான இவர், இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட Reckitt Benckiser Group என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார்.

பெப்சிகோ

பெப்சிகோ

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கும் லக்ஷ்மன் நரசிம்மன் Reckitt Benckiser நிறுவனத்திற்கு முன்பு PepsiCo நிறுவனத்தின் உலகளாவிய தலைமை வர்த்தக அதிகாரி, பெப்சிகோ நிறுவனத்தின் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா செயல்பாடுகளின் சிஇஓ, லத்தீன் அமெரிக்கா பெப்சிகோ-வின் சிஇஓ, அமெரிக்கப் புட்ஸ் சிஇஓ என முக்கியப் பதவிகளில் இருந்தவர்.

மெக்கன்சி அண்ட் கம்பெனி

மெக்கன்சி அண்ட் கம்பெனி

பெப்சிகோ நிறுவனத்திற்கு முன்பு மெக்கன்சி அண்ட் கம்பெனி நிறுவனத்தில் அமெரிக்கா, ஆசியா, இந்திய சந்தைகளின் நுகர்வோர், ரீடைல், டெக்னாலஜி பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

லக்ஷ்மன் நரசிம்மன் கல்வி

லக்ஷ்மன் நரசிம்மன் கல்வி

லக்ஷ்மன் நரசிம்மன் இந்தியாவில் புனே பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார், இதைத் தொடர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள லாடர் இன்ஸ்டியூட்-ல் ஜெர்மன் மற்றும் சர்வதேச ஆய்வுகளில் எம்.ஏ மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் பைனான்ஸ் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Starbucks New CEO Laxman Narasimhan annual salary package; Check full details

Starbucks New CEO Laxman Narasimhan annual salary package; Check full details, Laxman Narasimhan has been named as the new CEO of coffee giant Starbucks. He joined a growing cohort of Indian-origin business leaders at the helm of global corporationsLaxman Narasimhan was previously the CEO of UK-based Reckitt Benckiser

Story first published: Friday, September 2, 2022, 15:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.