1 வருடத்தில் 15% லாபம் தரலாம்.. மறக்காம இந்த பங்கினை வாங்கி போடுங்க,, தரகு நிறுவனத்தின் பலே கணிப்பு

சந்தையில் நிலவி வரும் பலத்த ஏற்ற இறக்கமான நிலைக்கு மத்தியில் பங்குகளை வாங்கலாமா? முதலீட்டினை தொடரலாமா? வேண்டாமா? என்ற பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

ஆனால் இந்த சவாலான காலகட்டத்திலும் நிதி நிறுவன பங்கினை வாங்கி வைக்கலாம் என ஆனந்த ரதி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

அது என்ன பங்கு? அதன் இலக்கு விலை என்ன? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? ஏன் இந்த பங்கினை வாங்க தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.

8 முக்கிய உற்பத்தி துறைகளின் நிலை என்ன..?

என்ன நிறுவனம்?

என்ன நிறுவனம்?

பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை நிறுவனமான பஞ்சாப் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தின், பஙகினைத் தான் வாங்கி வைக்க தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது..

இதன் இலக்கு விலையானது ஒரு பங்குக்கு 526 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது,. இதன் தற்போதைய விலையில் முதலீட்டாளார்கள் வாங்கி வைக்கிறார்கள் எனில், அவர்களுக்கு 15% லாபம் 12 மாதங்களில் கிடைக்கலாம்.

 

பங்கு விலை நிலவரம்?

பங்கு விலை நிலவரம்?

இந்த நிதி நிறுவனம் வீட்டுக் கடன் சேவையினை வழங்கி வருகின்றது. இந்த நிதி நிறுவன பங்கின் தற்போதைய விலை 380.50 ரூபாயாகும். இப்பங்கின் விலையானது இன்று 362.35 ரூபாயாக தொடங்கியது. இதன் கடந்த அமர்வின் முடிவு விலையானது 260.15 ரூபாயாகும். இதன் இன்றைய உச்சம் எஸ் எஸ் இ-யில் 387 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்த பட்ச விலையானது 362.35 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 675.15 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 311.45 ரூபாயாகும்.

இன்றைய நிலவரம் என்ன?
 

இன்றைய நிலவரம் என்ன?

பி எஸ் இ-யில் இந்த பங்கு விலையானது இன்று 5.22% ஏற்றம் கண்டு 378.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் எஸ் எஸ் இ-யில் 386.75 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்த பட்ச விலையானது 362 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 675.15 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 312 ரூபாயாகும்.

பங்கு வரலாறு

பங்கு வரலாறு

இப்பங்கின் விலையானது கடந்த 1 வாரத்தில் 6.79% அதிகரித்துள்ளது. இதே கடந்த 1 மாதத்தில் 8.33% அதிகரித்துள்ளது. இதே 3 மாதத்தில் 15.61% அதிகரித்துள்ளது. இதே கடந்த 1 ஆண்டில் 41.91% அதிகரித்துள்ளது. இதே கடந்த 3 மற்றும் 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது முறைய, 41.17% மற்றும் 76.63%மும் ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கானது கடந்த நவம்பர் 7, 2016 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.

லாபம் சரிவு தான்

லாபம் சரிவு தான்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இதன் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 3% குறைந்து, 235 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே முந்தைய காலாண்டினை காட்டிலும் 39% சரிவினைக் கண்டுள்ளது. இதன் வட்டி வருவாய் விகிதமானது 33% குறைந்து, 370 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது அதன் கார்ப்பரேட் கடன் வளர்ச்சியிலும் சரிவினைக் கண்டுள்ளது.

வாரக்கடன் சரிவு

வாரக்கடன் சரிவு

எனினும் வாரக்கடன் விகிதமும் குறைந்துள்ளது. முதல் காலாண்டில் சரிவினைக் கண்டிருந்தாலும், இனி வரவிருக்கும் காலாண்டுகளில் வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் தரகு நிறுவனம் இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PNB backed housing finance stock for 15% potential gains in 12 months

PNB backed housing finance stock for 15% potential gains in 12 months/1 வருடத்தில் 15% லாபம் தரலாம்.. மறக்காம இந்த பங்கினை வாங்கி போடுங்க,, தரகு நிறுவனத்தின் பலே கணிப்பு

Story first published: Friday, September 2, 2022, 18:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.