புதியதாக பணிக்கு சேரும் ஊழியர்கள் கால நேரம் பாராமல் தினசரி 18 மணி நேரம் பணி புரிய வேண்டும் என்று பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷாந்தனு தேஷ்பாண்டே சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தினையே உருவாக்கியுள்ளது எனலாம்.
ரத்தன் டாடாவின் முன்னாள் பொது மேலாளரான ஷாந்தனு தேஷ்பாண்டேவின் இந்த கருத்து, ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
18 மணி நேரம் வேலையா?
பொதுவாக 8 மணி நேர வேலை பணிக்கு, பல நிறுவனங்களில் 10 மணி நேரம் தாண்டியும் வேலை செய்யும் ஊழியர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களே எப்போது தான் வேலை முடியும். எப்போது வீட்டுக்கு செல்லலாம் என்ற மன நிலையில் பணிபுரிந்து வரும் சூழல் இருந்து வருகின்றது. இந்த நிலையில் 18 மணி நேரம் என்பது சற்று கோபத்தினை ஏற்படுத்துவது இயல்பான ஒன்று தான்.
ஊழியர்களின் நலன்
குறிப்பாக சில நிறுவனங்கள் வார விடுமுறை தவிர்த்து, தினசரி 10 மணி நேரத்திற்கு பணிபுரியும் சூழலே இருந்து வருகின்றது. ஆனால் இதுவே ஊழியர்களின் நலனை பாதிக்கலாம் என்ற நிலையில் 18 மணி நேரம் என்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வியையும் ஊழியர்கள் தரப்பில் எழுப்பிடுள்ளது. இதற்கிடையில் தான் ஷாந்தனுவின் கருத்து, சமூக வலைதளத்தில் பெரும் விவாத்தினை தூண்டியுள்ளது.
வேலையில் அர்ப்பணியுங்கள்
இது குறித்து தனது லிங்க்ட் இன் பக்கத்தில் கருத்தினை தெரிவித்துள்ள ஷாந்தனு, நீங்கள் 22 வயதான புதியதாக வேலைக்கு சேருகின்றீர் எனில், உங்களை நீங்களே செய்யும் வேலையில் அர்ப்பணியுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உடலையும் சீராக வைத்துக் கொள்ளுங்கள், அதே நேரம் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வரையில் பணி புரியுங்கள். இதனை 4 – 5 ஆண்டுகள் வரையில் தொடருங்கள்.
ஷாந்தனுவின் கருத்து?
வேலை செய்பவர்களுக்கு குடும்பம் உள்ளிட்ட பல அவசியமான தேவைகளும் இருக்கின்றன. நான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் தங்கள் வேலையை தொடர்வது மிக அவசியம். அதற்காக ஆர்பாட்டம் செய்யாதீர்கள். ஓயாமல் வேலை செய்யுங்கள். எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இது தான் உடன் வரும்
வேலை, வாழ்க்கை சமநிலை, குடும்பத்திற்கு செலவிடுவது, புத்துணர்ச்சி பெறுவது எல்லாம் சரி தான். இதனை நிறைய இளைஞர்கள் கவனிக்கிறார்கள். அவை முக்கியம் தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் தேவையில்லை. இளம் வயதில் வேலையில் தான் கடுமையாக உழைக்க வேண்டும். முதல் ஐந்து ஆண்டுகளில் நீங்கள் கற்பது தான் எஞ்சிய பணி வாழ்க்கைக்கு உடன் வரும் என்றும் கூறியுள்ளார்.
மன்னித்து விடுங்கள்
இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில், சிலர் இதனை ஏற்றுக் கொண்டாலும், சிலர் ஷாந்தவை விளாசி வருகின்றனர்.
இதற்கிடையில் இது குறித்து மன்னிப்பு கேட்டுள்ள ஷாந்தனு, சமூக வலைதளத்தில் இதுவே எனது கடைசி பதிவு. கருத்தினால் புண்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். நாட்டின் சூழல் அறிந்து தேவையை நான் உணர்கிறேன். என்னுடன் இருந்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
Ratan tata’s manager shantanu Naidu on 18 hours workday advice: what you thing?
Ratan tata’s manager shantanu Naidu on 18 hours workday advice: what you thing?/18 மணி நேரம் வேலையா.. ரத்தன் டாடாவின் முன்னாள் ஊழியரின் கருத்தால் ஷாக்கான ஊழியர்கள்..!