2010ல் கட்டப்பட்ட கடை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை: நியாய விலைக்கடையை திறக்க மக்கள் கோரிக்கை

பெரம்பலூர் :பெரம்பலூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட 12 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கே வராமல் உள்ள நியாய விலைக்கடையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் வேப்பம்பட்டி தாலுகாவில் உள்ள அய்யன்பேரையூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டது சமத்துவபுரம். அங்கு திமுக ஆட்சியின் போது நியாய விலைக்கடை ஒன்று கட்டப்பட்டது. இந்நிலையில், சமத்துவபுரத்தில் 2010ம் ஆண்டு நியாய விலைக்கடை கட்டப்பட்டது.

 இந்த நியாய விலைக்கடை மக்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள நியாய விலைக்கடையில் பொருட்களை வாங்கி கொண்டு வருகின்றனர். இதனால் ஆட்டோவுக்கு மட்டும் முன்னூறு ரூபாய் வரை செலவாகிறது என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த கடை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.