3% to 7.2%! தமிழகத்தில் எகிறிய வேலைவாய்ப்பின்மை விகிதம்! வெளியான அதிர்ச்சி புள்ளிவிவரம்!

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக ஆகஸ்ட் மாதத்தில் 8.28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் கடந்த மாதம்  3 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.2 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பொருளாதாரத்தை கணிக்கும் அமைப்பான சி.எம்.ஐ.இ நாட்டில் வேலைவாய்ப்பின்மை குறித்த பல தரவுகளைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் சென்ற ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.80 விழுக்காடாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 8.28 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
India's Unemployment Rate Rises To 7.83% In April: Report
குறிப்பாக, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.57 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.68 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. தொழில்துறை மற்றும் சேவைகள் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்தது இதற்கு அடிப்படை காரணமாக கூறப்படுகிறது.
image
வேலைவாய்ப்பின்மை அதிகமுள்ள மாநிலங்களில் ஹரியானா (37.3%), ஜம்மு காஷ்மீர் (32.8%) மற்றும் திரிபுரா (16.3%) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3 விழுக்காட்டில் இருந்து 7.2 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக சி.எம்.ஐ.இ தெரிவித்துள்ளது.
Unemployment another pandemic afflicting India
சி.எம்.ஐ.இ நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ், “இது ஒரு மோசமான மாதம். 4 மில்லியன் மக்கள் வேலை தேடி சந்தைக்குள் நுழைந்தபோதும், அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. குறைவான நபர்கள் மட்டுமே கடந்த மாதத்தில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.” என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.