புதுச்சேரி : ‘புதுச்சேரியில் வரும் 4ம் தேதி விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் செல்வதையொட்டி சண்டே மார்க்கெட் கடைகளை வைக்க வேண்டாம்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி கமிஷனர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வரும் 4ம் தேதி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கப்பட உள்ளது.இந்த ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில், போக்குவரத்து தடையின்றி செல்ல ஏற்பாடு செய்திட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வரும் வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட காந்தி வீதியில், அஜந்தா சிக்னலில் இருந்து நேரு வீதி சந்திப்பு வரையிலான பகுதியில் வரும் 4ம் தேதி சண்டே மார்க்கெட் கடைகள் செயல்படக்கூடாது.நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சண்டே மார்க்கெட் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement