aiadmk case: 70 நாட்கள்… அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்து வந்த பாதை!

ஜூன்: 22:
சென்னை வானகரத்தில் ஜூன் 23 ஆம் நடத்தப்படவிருந்த பொதுக்குழுவுக்கு தடை கோரி பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ஜூன் 22 நள்ளிரவு:
சண்முகத்தின் மேல்மூறையீட்டு மனுவை இரவோடு இரவாக விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன் பொதுக்குழு நடத்த அனுமதி.

ஜூன் 23:
ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிப்பு. தமிழ் மகன் உசேனை அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக அறிவித்த பொதுக்குழு, ஜூலை 11 ஆம் தேதி, புதிய தீர்மானங்களுடன் பொதுக்குழு நடைபெறு்ம் என அறிவிப்பு

ஜூலை 11:
ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஜூலை 29:
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு. வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியதுடன், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவு

ஆகஸ்ட் 3:
பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீிதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற கோரி தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு முறையீடு

ஆகஸ்ட் 5:
வேறு நீதிபதியை நியமிக்க வசதியாக வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி

ஆகஸ்ட் 6:
அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமனம்

ஆகஸ்ட் 11:
இருதரப்பு வாதங்களும் நிறைவு. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்

ஆகஸ்ட் 17:
ஜூலை 11 இல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டு்ம் என்றும் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி உத்தரவு

ஆகஸ்ட் 18:
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு

ஆகஸ்ட் 25:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட ட நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது

செப்டம்பர் 2:
ஜூலை 11 இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பரபரப்பு தீர்ப்பு. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓபிஎஸ் அறிவிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.