17 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கால்பந்து அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளராக இருந்தவர் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ். கடந்த ஜூன் மாதம் U-17 இந்திய மகளிர் கால்பந்து அணி நார்வேக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது அலெக்ஸ் ஆம்ப்ரோஸ், அணியிலிருந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் அவர் இந்தியாவிற்குத் திரும்பி அனுப்பப்பட்டார். பின்னர் அகில இந்தியக் கால்பந்து கூட்டணி (AIFF), அலெக்ஸ் ஆம்ப்ரோஸை பதவி நீக்கம் செய்திருந்தது.
இது குறித்து விரிவாகப் படிக்க, இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இந்நிலையில் தற்போது டெல்லியில் உள்ள துவாரகா காவல் துறையினர், அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டமான போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது பற்றிக் கூறியுள்ள AIFF, “இதுபோன்ற குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விசாரணையில் இருக்கும் நபரைத் தற்காலமாகக் கூட்டமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளோம்” என்று கூறியுள்ளது.