சென்னை: அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 975 டிங்கரிங் ஆய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அடல் புத்தாக்க இயக்கத்தை நிதி ஆயோக் நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தை 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை ஏற்படுத்துதல், 101 அடல் இன்குபேஷன் மையங்கள் அமைத்தால், 50 அடல் சமுதாய புத்தாக்க மையங்களை உருவாக்குதல், 200 ஸ்டார்ட் அப்-களுக்கு நிதி உதவி அளித்தல் ஆகியவைகளை செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பள்ளிகளில் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைப்பதற்காக ரூ. 20 லட்சம் வரை மானிய உதவி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 10 ஆயிரம் இந்த ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1033, தமிழ்நாட்டில் 975, உத்திர பிரதேசத்தில் 955 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016ம் ஆண்டு 21, 2017ம் ஆண்டு 10, 2018ம் ஆண்டு 45, 2019ம் ஆண்டு 315, 2020ம் ஆண்டு 99, 2021ம் ஆண்டு 448, 2022ம் ஆண்டு 37 டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து 7 அடல் இன்குபேஷன் மையங்கள், 3 அடல் சமுதாய புத்தாக்க மையங்களும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 51 ஸ்டார்ட் அப்-களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 6 ஸ்டார்ட் அப்-களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.