அனில் அகர்வாலை சந்தித்த பெண் விமானி.. சந்திப்பின் பின்னணியில் ஒரு ஆச்சரியம்!

பிரபல தொழிலதிபர் அனில் அகர்வால் தனது நிறுவனத்தில் பணி செய்த பெண் ஊழியர் ஒருவர் தற்போது விமானியாக இருப்பதை பெருமையுடன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண் விமானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தொழிலதிபர் அனில் அகர்வால் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாட்டிலுள்ள இளம் பெண்களுக்கு இந்த விமானி ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கிரெடிட் கார்டு வாழ்க்கையை வளமாக்குமா..? நாசமாக்குமா..?

அனில் அகர்வால்

அனில் அகர்வால்

வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் சமீபத்தில் ஒரு விமான பயணம் மேற்கொண்ட போது ஒரு இளம் பெண் விமானி அவரிடம் வந்து தான் அவருடைய நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கூறினார். அதனை கேட்டு ஆச்சரியம் அடைந்ததாகவும், தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் தற்போது வாழ்க்கையின் உயரத்தில் வெற்றி பெற்றதை கேட்டு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக அவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நேஹா கபூர்

நேஹா கபூர்

அந்த இளம்பெண்ணின் பெயர் நேஹா கபூர் என்றும் அவர் இளம்பெண்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த பெண் விமானி நம் நாட்டின் இளம் பெண்களுக்கு உதாரணமாக இருக்கிறார் என்றும் ஒருவர் தனது கடின உழைப்பின் மூலம் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என்பதை நிரூபித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் விமானிகள்
 

பெண் விமானிகள்

உலக அளவில் பெண் விமானிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ள அனில் அகர்வால், தன்னுடைய நிறுவனத்தில் இருந்து சென்ற பெண் ஒருவர் விமானி ஆகியது தனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்களின் கனவு

இளம்பெண்களின் கனவு

இந்த பதிவை படிக்கும் இளம் பெண்கள் தங்கள் கனவுகளுக்கு பின்னால் செல்லுமாறு கேட்டுக் கொள்வதாகவும், இளம்பெண்களின் பெற்றோர்களை பொருத்தவரை அவர்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களுடைய கனவை நனவாக்க ஒத்துழையுங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

வானமே எல்லை

வானமே எல்லை

எல்லாவற்றுக்கும் மேலாக ‘வானமே இல்லை’ என்று அவர் தனது பதிவை முடித்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அனில் அகர்வால் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த பதிவுக்கு 35000க்கும் மேற்பட்ட லைக்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும் பதிவாகியுள்ளது.

உதாரணம்

உதாரணம்

இளம் பெண்களுக்கு அதிகாரத்தை அளித்து ஊக்கம் அளித்தால் அவர்கள் எந்த உயரத்திற்கும் பறக்க முடியும் என்பது இது ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன் லிங்க்ட்-இன் பயனாளி ஒருவர் பதிவு செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vedanta chairman Anil Agarwal shares interaction with ex-employee who is now a pilot

Vedanta chairman Anil Agarwal shares interaction with ex-employee who is now a pilot | அனில் அகர்வாலை சந்தித்த பெண் விமானி.. சந்திப்பின் பின்னணியில் ஒரு ஆச்சரியம்!

Story first published: Saturday, September 3, 2022, 12:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.