ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்னிந்திய முதல்வர்கள் கலந்து கொள்ளும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
நாட்டில் உள்ள மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தென் மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. அமித் ஷா தலைமையில் ஆண்டுக்கு ஒருமுறை இதன் கூட்டம் நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆகியோர் கலந்து கொண்டனர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. அப்போது தமிழ்நாடு சார்பாக அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டுள்ளார்.