இந்தியாவில் எலக்டிரிக் கார் விற்பனையில் நம்பர் இடத்தை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.

டாடா நிறுவனத்தின் நெக்சான் இவி, டாட டைகோர் இவி போன்றவை அதில் முக்கியமானவை.

அண்மையில் டாடா நிறுவனம் தங்களது டாடா நெக்சான் இவி மாடலை அப்கிரேட் செய்து டாடா நெக்சான் இவி மேக்ஸ் என அறிமுகம் செயதது. இப்போது டாடா நெக்சான் ஜெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

டாடா நெக்சான் ஈவி ஜெட்

டாடா நெக்ஸான் இவி ஜெட் பதிப்பானது மண்ணின் வெண்கலம் மற்றும் பிளாட்டினம் சில்வர் ஆகிய இரண்டு-டோன் வெளிப்புற வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உட்புறம்

உட்புறம்

டாடா நெக்சான் இவி புதிய உட்புற வண்ணம் டெக்னோ-ஸ்டீல் வெண்கல பூச்சு கொண்ட நேர்த்தியான காக்பிட் வடிவமைப்புடன் வெளியாகியுள்ளது.

கண்ட்ரோல் நாப் & சன் ரூப்

கண்ட்ரோல் நாப் & சன் ரூப்

டாடா நெக்சான் இவியின் கண்ட்ரோல் நாப் மேம்பட்ட டிஜிட்டல் டிஸ்பிளேவுடன் கருப்பு நிறத்தில் வந்துள்ளது. காற்றோட்டம் மற்றும் இயற்கை வெளிச்சத்தை மேம்படுத்த மின்சார சன்ரூஃப் உள்ளது.

டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு
 

டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு

டாடா நெக்சான் இவியில் டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கார் டயரில் காற்றின் அளவு குறைவாக இருந்தால் அது டிஸ்பிளேவில் அலர்ட் காண்பிக்கும். அதை வைத்து கார் டயர் காற்றினை நிரப்பலாம்.

சுத்தமான காற்று

சுத்தமான காற்று

உலகம் முழுவதும் எல்லா நகரங்களிலும் காற்றின் மாசு அளவு அதிகரித்து வரும் நிலையில், டாடா நெக்சான் இவியில் ஏர் பியூரிஃபையர் உள்ளது. இது காற்றைச் சுத்தப்படுத்தி நல்ல காற்றை வழங்கும்.

விலை

விலை

இப்படி பல்வேறு மிரட்டலான அம்சங்களுடன் வெளியாகியுள்ள டாடா நெக்சான் இவியின்ஆரம்ப விலை 17.50 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் விற்பானை

ஆகஸ்ட் மாதம் விற்பானை

டாடா மோடார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 3,845 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக்கார் விற்பனை சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 276 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜூலை மதத்துடன் ஒப்பிடும் போது எலக்ட்ரிக் கார் விற்பனை 4.4 சதவீதம் சரிந்துள்ளது. ஜூலை மாதம் டாடா மோட்டார்ஸ் 4,022 எலட்ரிக் காரகளை விற்பனை செய்து இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Nexon EV Jet Edition launched with new features at Rs 17.50 lakh

Tata Nexon EV Jet Edition launched with new features at Rs 17.50 lakh |

Story first published: Saturday, September 3, 2022, 7:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.