லிஸ்பன்:போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில், அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா செய்தார்.
ஐரோப்பிய நாடான போர்ச்சுகலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளனர். அப்போது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அந்நாட்டின் சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ, அவசர கால மகப்பேறு சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டிருந்ததால், அந்தப் பெண் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆம்புலன்ஸில் சென்றபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 722 கிராம் மட்டுமே எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அந்த பெண் உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக, சுகாதார அமைச்சர் மார்டா மீது கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, இந்தச் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்ற அவர், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement