இரவு உணவு சாப்பிட்ட பின்னர் சில விடயங்களை செய்யவேக் கூடாது.
சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சரியான உணவுப் பழக்கம் இல்லையென்றால், அது உடலைக் கடுமையாகப் பாதிக்கும் விஷயமாக மாறிவிடும்.
அதே போல இரவு உணவுக்குப் பின் நாம் சில விஷயங்களைச் செய்யக்கூடாது.
அப்படிப்பட்ட சில செயல்கள் பற்றிப் பார்க்கலாம்.
நடப்பது
இரவு சாப்பிட்ட உடன் நடக்கும் போது கைகளுக்கும், கால்களுக்கும் இரத்தம் வேகமாகப் பாய்வதால் செரிமானம் தாமதமாகவே நடைபெறுகிறது.
அதனால் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்ய வேண்டாம்.
LOUIS HANSEL/UNSPLASH
தண்ணீர்
அதிக நீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் இரவு உணவுக்குப் பின் அதிகமாக நீர் குடித்தால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பது பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுவும் இரவு உணவுக்குப் பின் புகைப்பது அதைவிடக் கெடுதலானது. புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகளுக்கு வித்திடும்.
தேநீர்
இரவு சாப்பிட்ட பின் தேநீர் குடிப்பதால், அதிலுள்ள பாலிஃபீனால்கள் நாம் சாப்பிட்ட உணவிலுள்ள இரும்புச்சத்து எல்லாவற்றையும் உறிஞ்சிவிடும்.
உடற்பயிற்சி
இரவு சாப்பிட்டதும் உடற்பயிற்சி செய்வது கண்டிப்பாக நல்லதல்ல. இதனாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
குளிக்க வேண்டாம்
இதுவும் நடைப்பயிற்சி போலத்தான். இரவு உணவுக்குப் பின் கை, கால்களிலேயே இரத்தம் பாய்வதால், வயிற்றுக்குப் போக வேண்டிய இரத்தம் குறைந்து விடுகிறது. இதனால் செரிமானம் பாதிக்கப்படுகிறது.
piedmont