கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன் தினம் இவர் கோவில்பட்டி நகருக்குள் பைக்கில் சென்ற போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி பைக்குடன் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.