`உடைத்துப் பேசுவோம்’ ஆனந்த விகடன் சேனலின் தனித்துவமான நிகழ்ச்சி அதில் நடிகை ரேகா நாயர் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் நடிகை ரேகா நாயர். அவரின் துணிச்சலான பதில்கள் இதோ!
நீங்க ஒரு நடிகையா உங்க கரியரைத் தொடங்கினப்போ நிறைய நிராகரிப்புகளைத் தாண்டி வந்திருப்பீங்க. அதைப் பத்தி சொல்லுங்க!
அதாவது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாய்ஸ், டேஸ்ட்னு இருக்கும். அதனால நிறைய நிராகரிப்புகள் இருக்கும். அதுக்காக நான் என்னைக்கும் அதை நினைச்சு வருத்தப்பட்டதே கிடையாது. அது ஒரு வலின்னு நினைச்சதும் கிடையாது. நம்ம அழகை வச்சு நம்ம என்ன பண்ணலாம், நமக்கு என்ன கேரக்டர் நமக்கு பொருந்தும்னு யோசிச்சு அடுத்தடுத்து போய்கிட்டே இருக்கணும். நான் அப்படிப்பட்ட ஆளுதான்.
பொதுவாக சினிமா,விஜே, மீடியானு எதுவானாலும் ஒருத்தரோட அழகுதான் அவருக்கு முதல் சிபாரிசா இருக்கும். அதன் பிறகு தான் திறமைலாம் பேசும்னு சொல்லப்படும். இந்தக் கருத்தை நீங்க எப்படி பார்க்கிறிங்க?
கண்டிப்பா. பொதுவா ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும், ஒருத்தவங்க அழகா இருந்தா அவங்க அழகு கண்டிப்பாக பேசப்படும். ஆனால் அழகு, திறமைனு நம்ம கிட்ட என்ன இருந்தாலும் அது நம்ம எப்படி ஸ்பெஷலா, தனித்துவமா கொடுக்குறோம் அதை பொருத்துதான் இருக்குது நம்ம திறமை. உதாரணமாக பெப்சி உமாவைப் போல சிறந்த தொகுப்பாளர் யாருமே இல்ல. உலக மக்கள் எல்லாரோட மனசுலையும் அவங்க தனி இடம் பிடிச்சாங்க. அவங்க உடை, பாவனை,அழகு முக்கியமா அவங்க தமிழ்னு எல்லாமே மக்காளால ஈர்க்கப்பட்டது. இப்படி எதுவானாலும் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தணும். ஒரு படம்னா அதைப் பாத்துட்டு வெளிய வர்ற ரசிகனுக்கு கண்டிப்பா ஒரு தாக்கத்தை ஏற்படுத்தணும். அப்போதான் அது ஒரு நல்ல திரைப்படம். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துனாதான் அது படம். இல்லனா அது நம்மை கடந்துப் போகிற மேகம். நம்மகிட்ட இருக்குற திறமையை நம்ம தனித்துவமா காண்பிச்சாதான் நம்ம ஜெயிக்க முடியும். அதுதான் இன்றைய நிலை.
ஒரு படம்னா அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சொன்னிங்க. சமீபத்துல அப்படி உங்களுக்குல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துன படம்னு எந்த படத்தை சொல்வீங்க?
`தி கிரேட் இந்தியன் கிச்சன்’ கிளைமாக்ஸ் சீன்ல அந்தப் பெண் எல்லாத்தையும் விட்டுட்டு தன்னோட அடையாளத்தை தேடி தான் தன்னோட வாழ்க்கையில் ஜெயிக்கணும் என வெளிய வருகிறார். அதே மாதிரியே எத்தனையோ பெண்கள் வெளியே வந்து இன்னைக்கும் ஜெயிச்சுட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் முன்மாதிரியா அந்தப் படம் இருந்தது.
ரேகா நாயர் நேர்காணலை வீடியோ வடிவில் காண – Video Interview