உரம், இடுபொருட்களின் விலை உயர்வு காரணமா?: நாடு முழுவதும் நெல் சாகுபடி பரப்பு 5.62% சரிவு.. கரும்பு, பருத்தி சாகுபடி சிறிய அளவில் அதிகரிப்பு..!!

டெல்லி: இந்த ஆண்டு பருவமழை வழக்கமான அளவில் பெய்திருக்கும் போதும் கடந்த ஆண்டை காட்டிலும் நெல்சாகுபடி 5.62 விழுக்காடு குறைந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 406.9 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு 384 ஹெக்டராக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, அரியானா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ள போதிலும், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் நெல் சாகுபடி பரப்பு சராசரியாக 5.62 விழுக்காடு குறைந்துள்ளது. உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வே நெல் சாகுபடி குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல நடப்பு காரிப் பருவத்தில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்யப்படும் பரப்பும் சிறிதளவு குறைந்துள்ளது. எனினும் கரும்பு மற்றும் பருத்தி சாகுபடி பரப்பளவு சிறிய அளவில் அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.