கள்ளகுறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு அளித்தனர்.
கள்ளகுறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மறுபுறம் வேறு சிலரால் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டு, பள்ளி பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: 2 ஆண்டுக்குள் மதுரையின் முகமே மாறும் – அமைச்சர் பி.டி.ஆர் பேச்சு
இதனிடையே மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்றுப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்றுகிறது.
இந்தநிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு, மாணவியின் பெற்றோர் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திந்து மனு அளித்து வருகின்றனர். நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்தவகையில், இன்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு அளித்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், அவரை சந்தித்து ஸ்ரீமதியின் பெற்றோர் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீமதியின் பெற்றோர், அனைத்து தலைவர்களையும் சந்திப்பது என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான். சிபிசிஐடி மேல் முழு நம்பிக்கை உள்ளது, வேறு விசாரணை தேவையில்லை. இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் முரணாக உள்ளன என்று தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil