தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு பின்னர் கமல்ஹாசனுக்கு அரசியல் ஆசை துளிர்விட்டதால் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
கட்சி தொடங்கிய வேகத்தில் அதிமுக, திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வந்ததோடு நடந்த முடிந்த சட்டசபை தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் தனித்தே போட்டியிட்டது.
இந்த தேர்தல்களில் சொல்லிக் கொள்ளும்படியான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் கட்சியால் அறுவடை செய்ய முடியாமல் போனாலும், பிரபல டி.வி நிகழ்ச்சி மூலம்
மார்க்கெட்டை உச்சத்திலேயே வைத்திருந்தார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூலை வாரி குவித்து உள்ளதோடு ரஜினியின் சாதனையையே முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் விக்ரம் படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிட்டது. இதன் மூலம் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினுக்கு இடையே நெருக்கமும் அதிகரித்துள்ளது.
இந்த நேரத்தில் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்து கொடுத்ததற்கு நன்றிக்கடனாக
நடிப்பில் ஒரு படம் தயாரிக்க கமல் முன்வந்துள்ளதாகவும் அதற்கு பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் இந்த நெருக்கம் அரசியல் ரீதியாகவும் சில மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு அங்கீகாரம் பெற்றே ஆக வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார்.
கமல்ஹாசனின் இந்த மனநிலையை நாடிப் பிடித்து பார்த்த உதயநிதி ஸ்டாலின், ‘இனியும் தனித்து நின்று சீமானை போல் கட்சியின் பொலிவை இழந்து விடாதீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.. அதுக்கான ஆஃபரும் இருக்கு’ என நேரடியாகவே தூண்டில் போட்டுள்ளார்.
இதை கப்ப்பென பிடித்துக் கொண்ட கமல்ஹாசன், ‘அப்படி என்ன தான் கிடைக்கும்?’ என்று ஓபனாக கேட்க, ஒரே வாரத்தில்
தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, ‘வைகோ-கணேசமூர்த்தி’ ஸ்டைலை உதயநிதி சொல்லி உள்ளார்.
இதை மகிழ்ச்சியுடன் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டதாகவும், தேர்தல் நெருங்கும் வரை அமைதி காப்போம் என்று இரு தரப்பும் உறுதிபூண்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
ஒற்றை ஆளாய் சாதித்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் சாதுர்யத்தை அறிந்து திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சி தலைவர்களும் கூட குஷியில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.