வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. சிம்பு ஹெலிகாப்டரில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்தது அதிக கவனம் பெற்றுள்ளது. அதோடு இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, “எல்லாரும் எனக்கு attitude என்று தான் சொல்வார்கள். ஆனால் எனக்கு எப்போதும் attitude இருந்ததில்லை. அதற்கு பதில் எனக்கு gratitude தான் உள்ளது. உங்களுக்கு நல்லது செய்தவர்களுக்கு நன்றியுடன் இருங்கள்” என்று தன்னடக்கத்துடன் பேசி ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளியுள்ளார்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, படத்தின் ட்ரைலரும் நேற்று வெளியானது. அதில் பின்னணியில் படத்தின் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார். அதற்கு சிம்பு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். படத்துக்கு உள்ளே தான் கவுதம் குரல் வழக்கமாக வரும் நிலையில், தற்போது சிம்பு குரலில் வராமல் அவர் குரலிலேயே டிரைலர் வருவதால் ரசிகர்கள் அவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதோடு தனுஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டாவில் கூட தனுஷ் தான் ட்ரைலரில் பின்னணி பேசியிருப்பார். அதனால் சிம்பு ரசிகர்கள் இதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வெந்து தணிந்தது காடு படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளதாக ட்ரைலரில் குடிப்பிடப்பட்டு உள்ளது. சிம்பு மூன்று வித கெட்டப்களில் தோன்றமளிக்கிறார். இப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.