மாஸ்கோ:முன்னாள் சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மைக்கேல் கார்பசேவ், 91, உடலுக்கு முழு அரசு மரியாதை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதி சடங்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
சோவியத் யூனியன் உடைவதற்கு முன், அதன் கடைசி தலைவராக பதவி வகித்தவர் மைக்கேல் கார்பசேவ். சோவியத் யூனியனில் இடம்பெற்று இருந்த நாடுகள் தனி நாடுகளாக பிரிந்து செல்வதை தடுக்காமல் கார்பசேவ் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது.
இந்நிலையில் மைக்கேல் கார்பசேவ் வயோதிகம் காரணமாக ரஷ்யாவில் சமீபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட ரஷ்ய தலைவர்களின் இறுதி சடங்கு நடத்தப்பட்ட மாஸ்கோவின், ‘ஹால் ஆப் காலம்ஸ்’ என்ற இடத்தில், கார்பசேவ் இறுதி சடங்கு நடக்கவுள்ளது.முழு ராணுவ மரியாதையுடன் அவரது இறுதி சடங்கு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஆனால் முழு அரசு மரியாதை அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியன் பிரிவினையில் கார்பசேவ் மீதுள்ள அதிருப்தி காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், கார்பசேவ் உடலுக்கு அதிபர் புடின் நேற்று முன்தினம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
”ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் இருப்பதால், அதிபர் புடினால் இறுதி சடங்கில் பங்கேற்க இயலாது.”எனவே தான் அவர் முன்னதாகவே வந்து அஞ்சலி செலுத்தினார்,” என அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.இது முன்னாள் தலைவருக்கு செய்யப்படும் அவமதிப்பாக கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement