கனடா, நார்வே போன்ற நாடுகளில் பெண்களுக்கான பிரசவக் கால விடுப்பு 50 வாரங்கள் மற்றும் 44 வாரங்களாக உள்ளது. மேலும் இதே போல் மேற்கெத்திய நாடுகளில் பெண்களின் பிரசவக் கால விடுப்பு என்பது குறைந்தது 6 மாதங்கள் என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரசவக்கால விடுப்பு 12 வாரங்கள் என்று இருந்தது. பின்னர் இந்த விடுப்பானது 26 வாரங்களாக மாற்றி அனுமதி வழங்க பெண்கள் மற்றும் சமூக நலத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016, மார்ச் 9 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் பணிபுரியும் பெண்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட 12 வார பேறு கால விடுமுறையை, 26 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு மசோதா தாக்கல் செய்தது.
மேலும் இந்த மசோதாவில், முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் 26 வாரங்கள் என் விடுப்பும், பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு 12 வாரங்கள் விடுப்பு என்ற முறையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50-க்கு மேலான பணியாளர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும், பெண்களுக்கு குழந்தைகளைப் பராமரிக்க தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தாய்மார்களுக்கு பணி நேரத்தின்போது குழந்தைக்கு பாலூட்ட நான்கு முறை அனுமதி வழங்கப்பட வேண்டும். வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க முடியும் நிலையில், நிறுவனத்தினர் அவ்வாறு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மசோதா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள மசோதாவின் சிறப்பம்சங்களில் குழந்தை பிரசவத்தின்போது இறத்தல், இறந்து குழந்தை பிறத்தல் என்ற சூழ்நிலையில் பெண்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று அப்பட்டமாக கூறப்படாமல் இருந்தது. இந்நிலையில், இது போன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தாய்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படவேண்டும் என்று மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
மேலும், குழந்தை பிறந்து 28 நாட்களுக்குள் குழந்தை உயிரிழக்கும் பட்சத்தில், குழந்தை இறந்த நாள் முதல் 60 நாட்களுக்கு சிறப்பு விடுப்பாக மாற்றப்பட்ட விடுப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே போல் 28 நாட்களுக்குள் உயிரிழக்கும் குழந்தைகள் என்ற சூழ்நிலையில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata