கேஜிஎஃப் 2- எல்லாம் ஒரு படமா? கழுவி ஊற்றிய பிரபல இயக்குநர்.. பொறாமையால் பொங்குகிறாரா?

பெங்களூரு: சர்ச்சை இயக்குநர் என பெயர் எடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீப காலமாக கில்மா படங்களை இயக்கி வருகிறார்.

அப்படி இருந்தும் எந்த படங்களும் பெரிதாக ஓடுவதில்லை. ஆர்ஆர்ஆர் படத்தை விமர்சித்து வந்த ராம் கோபால் வர்மா, தற்போது கன்னட படமான கேஜிஎஃப் 2 படத்தை விமர்சித்துள்ளார்.

மேலும், பாலிவுட்டில் யாருக்குமே கேஜிஎஃப் 2 படத்தை பிடிக்கவில்லை என்றும் பேசியுள்ளார்.

வசூலில் நம்பர் ஒன்

இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே நடிகர் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 2 திரைப்படம் தான் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், இப்படியொரு மோசமான கமெண்ட்டை இயக்குநர் ராம் கோபால் வர்மா சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

டாப் நாட்ச் மேக்கிங்

டாப் நாட்ச் மேக்கிங்

கர்நாடகாவின் கோலாரில் உள்ள தங்க சுரங்கத்தை பற்றிய புனைவு கதையாக உருவான கேஜிஎஃப் முதல் பாகத்திலேயே ஹாலிவுட் படமான மேட்மேக்ஸ் ஃபியூரி ரேஞ்சுக்கு மேக்கிங் இருக்கும். அதன் இரண்டாம் பாகமான கேஜிஎஃப் 2 படத்தில் 19 வயசு பையன் பண்ண எடிட்டிங் வொர்க் எல்லாம் படத்தை தியேட்டரில் ஒரு நொடி கூட ரசிகர்களை அசைய விடாமல் செய்து ஹிட் அடித்தது.

உலகளவில் பேசப்படவில்லை

உலகளவில் பேசப்படவில்லை

ஆனால், அந்த படம் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தைப் போல உலகளவில் பேசப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அந்த படம் வெளியாகவில்லை என்பது தான். ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வாயடைத்துப் போயுள்ளனர் ராம்சரணை அடுத்த ஜேம்ஸ் பாண்டாகவே நடிக்க வைக்கலாம் என்கிற அளவுக்கு பாராட்டி உள்ளனர். ஜூனியர் என்டிஆர் நடிப்புக்கு ஆஸ்கர் தரவேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனால், இதுபோன்ற எந்தவொரு பாராட்டுக்களும் கேஜிஎஃப் 2 படத்துக்கு கிடைக்கவில்லை.

முழுசாவே பார்க்கல

முழுசாவே பார்க்கல

இந்நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா பாலிவுட்டில் யாருக்குமே கேஜிஎஃப் 2 படம் பிடிக்கவில்லை என்றும் ஒரு இயக்குநர் தன்னிடம் 5 தடவைக்கு மேல் அந்த படத்தை பார்க்க நினைத்து டிவியை ஆன் செய்வேன். ஆனால், அரை மணி நேரம் கூட பார்க்க முடியாத நிலையில், அப்படியே ஆஃப் செய்து விட்டு என் படத்திற்கான கதையை எழுத தொடங்கி விடுவேன். எப்படித்தான் இந்த படம் எல்லாம் ஓடுதோ தெரியவில்லை என புலம்பியதாக கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

இந்தி பெல்ட்டிலேயே முதல் நாள் 50 கோடிக்கும் மேல் அதிக வசூலை எடுத்த கேஜிஎஃப் 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக 500 கோடிக்கும் அதிகமாக அங்கேயே வசூல் செய்துள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் படங்கள் எல்லாம் இந்த ஆண்டு வெளியாகி டிசாஸ்டர் ஆன நிலையில், அந்த பொறாமையில் அந்த பிரபல இயக்குநர் அப்படி பேசி உள்ளார் என்றும் ராம் கோபால் வர்மா இயக்கிய காவியங்கள் தான் சூப்பர் படங்கள் என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.