ட்விட்டரில் ஒற்றை வார்த்தை பதிவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தாங்கள் முன்னெடுக்கும் அரசியலை ஒற்றை வார்த்தையில் பதிவு செய்து வருகின்றனர். அதுபோல, சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் தங்களுக்கு பிடித்த வார்த்தையை பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் ” திராவிடம்” என்றும் எடப்பாடி பழனிசாமி ”தமிழ்நாடு” என்றும் சீமான் ”தமிழ்த்தேசியம்” என்றும் சசிகலா ” ஒற்றுமை என்றும் ராமதாஸ் ”சமூகநீதி” என்றும் திருமாவளவன் ”சனநாயகம்’ என்றும் கமல்ஹாசன் ”மக்கள்” என்றும் இயக்குனர் வெங்கட்பிரபுவும் ”அன்பு” என்றும் அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இவர்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ”தமிழன்” என்று பதிவிட்டு தான் ஒரு பெருமைமிக்க கன்னடன் என்று சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்தடுத்து யாரெல்லாம் ட்வீட் போட போகிறார்கள் என்ற ஆர்வம் நெட்டிசன்களுக்கு அதிகரித்துள்ளது.
இந்த வரிசையில், தமிழக காவல்துறையும் ” காவல்” என்றும் திமுக எம்பி கனிமொழி ” திராவிடம்” என்றும் நடிகை ரோகிணி ” அம்பேத்கர்” என்றும் பதிவிட்டுள்ளனர். இவர்களில்
தலைவர்
போட்டுள்ள ட்வீட்டிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. விஜயகாந்தின் ட்விட்டர் பக்கத்தில் ”வறுமை ஒழிப்பு” என பதிவிடப்பட்டுள்ளது. இதுதான் அந்த வரவேற்புக்கான காரணம். கேப்டன் கேப்டன்தாங்க…