கோவிட் தடுப்பூசியால் இறந்த மகளுக்கு ஆயிரம் கோடி நிவாரணம் கேட்கும் தந்தை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கோவிட் தடுப்பூசியால் இறந்த மகளுக்கு ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டு தந்தை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

latest tamil news

டில்லியை சேர்ந்த திலீப் லூனாவால் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இவரது மகள் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 2021 ஜனவரியில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுள்ளார். இதன் காரணமாக தலைவலி மற்றும் வாந்தி மயக்கம் இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் மார்ச் 1ல் இறந்தார்.
கோவிஷீல்டு போட்டதன் பக்கவிளைவால் இறந்ததாக மத்திய அரசின் நோய் எதிர்ப்பு சக்தி கமிட்டி சான்று வழங்கியது. இதனை அவரது தந்தை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். தனது மகள் மரணத்திற்கு இந்த கோவிட் தடுப்பூசியே காரணம் என்றும், இவரது இழப்புக்கு தனக்கு ஆயிரம் கோடியை தர கோவிஷீல்டு தயாரித்த சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

latest tamil news

இந்த மனுவை ஏற்று கொண்ட கோர்ட் வரும் நவ.17 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. மேலும் மத்திய அரசு மற்றும் சீரம் இன்ஸ்டியூட் எய்ம்ஸ் இயக்குனர், மருத்துவ அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.