சீன ஆதிக்கம்.. அமெரிக்க வைத்த செக்.. தடுமாறும் டெஸ்லா..!

அமெரிக்காவில் ஆட்டோமொபைல் துறையை எலக்ட்ரிக் மயமாக்க இரண்டு மின் மயமாக்கல் திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளது.

அமெரிக்காவில் மின்சார வாகன தேவையை இவ்விரு திட்டங்களால் பெரிய அளவில் மேம்படுத்தப்படும். முதலாவதாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரசு தள்ளுபடி திட்டம், இரண்டாவதாகக் கலிபோர்னியா-வில் 2035 ஆம் ஆண்டிற்குள் புதிய பெட்ரோல் கார்களைத் தடை செய்வதற்கான விதிகளை அங்கீகரித்தது.

ஆனால் இவ்விரண்டுக்கும் அமெரிக்க அரசு செக் வைத்துள்ளது.

இதுதான் கடைசி சான்ஸ்.. விப்ரோ நம்பும் முக்கிய திட்டம்..!

அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு

ஒருபக்கம் அமெரிக்க அரசு எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும், மறுபுறம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கனிமங்கள், உதிரிப்பாகங்கள், உற்பத்தி ஆகிய அனைத்தும் அமெரிக்காவில் அல்லது அமெரிக்கா FTA வைத்துள்ள நாடுகளில் இருந்து மட்டுமே பெற வேண்டும்.

7500 டாலர் வரையில் தள்ளுபடி

7500 டாலர் வரையில் தள்ளுபடி

“கவலைக்குரிய வெளிநாட்டு நிறுவனங்கள்” பட்டியலில் இருக்கும் சீனா, ரஷ்யா நாடுகளில் இருந்து பெற கூடாது என்ற முக்கியத் தடை விதித்துள்ளது. இதைப் பூர்த்தி செய்யும் எலக்டிரிக் வாகனங்களுக்கு மட்டுமே 7500 டாலர் வரையிலான தள்ளுபடிகள் கிடைக்கும் இல்லையெனில் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு எவ்விதமான லாபமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

சீனா ஆதிக்கம்
 

சீனா ஆதிக்கம்

உலகின் 60% லித்தியம் சுரங்கத்தையும், 77% பேட்டரி-செல் உற்பத்தி திறன் மற்றும் 60% பேட்டரி பாகங்கள் உற்பத்தியையும் சீனா கட்டுப்படுத்தும் போது அமெரிக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்து சலுகை பெறுவது அவ்வளவு எளிதல்ல.

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா உட்படப் பெரும்பாலான அமெரிக்க எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வரும் பேட்டரி பொருட்களையே பெரிதும் நம்பியுள்ளனர். இப்படியிருக்கும் சூழ்நிலையில் சீனா-விடச் சிறப்பான சப்ளை செயின்-ஐ அமெரிக்க அரசு உருவாக்க வேண்டும்.

பேட்டரி சப்ளை செயின்

பேட்டரி சப்ளை செயின்

சீனா தற்போது உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குப் பேட்டரி சப்ளை செயின்-ஐ தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இதைச் சாத்தியப்படுத்த உலக நாடுகளில் இருக்கும் லித்தியம் உட்படப் பல கனிம வளங்களைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்தி வருகிறது.

உற்பத்தி

உற்பத்தி

இதேபோல் சீனாவில் இருக்கும் பேட்டரி உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகளவிலான மானியங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு உற்பத்தியை பெரிய அளவில் மேம்படுத்தி, விலை அளவுகளிலும் பிற நாடுகளைக் காட்டிலும் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Making Electric car without China supply chain is nightmare

Making Electric car without China’s supply chain is a nightmare; Because china China controls 60% of the world’s lithium mining, 77% of battery-cell capacity and 60% of battery-component manufacturing.

Story first published: Saturday, September 3, 2022, 17:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.