சொந்த செலவில் வண்டியை வாங்கி குப்பைகளை சேகரித்து அசத்தும் துப்புரவு பணியாளர்

ராஜபாளையத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் தனது சொந்த செலவில் குப்பை வண்டியை மோட்டார் சைக்கிளுடன் இணைத்து துப்புரவு பணியில் ஈடுபட்ட பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது. இந்நிலையில், நகராட்சி முழுவதிலும் சேரும் குப்பைகளை சேகரிக்க 141 நிரந்தர பணியாளர்களும், தனியார் நிறுவனம் சார்பில் 300 பேர் என மொத்தம் 431 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு சார்பில் அளிக்கப்பட்ட 70 பேட்டரி குப்பை வண்டிகளில், தற்போது 25 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. பழுதடைந்த வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து வாகனம் பயன்படுத்தப்படாத பகுதிகளில் தள்ளு வண்டிகளை பயன்படுத்தி குப்பைகள் அகற்றப்படுகிறது. இதனால் வேலை நேரம் அதிகரிப்பதுடன், தொழிலாளர்களின் உடல் உழைப்பும் வீணாகிறது.
image
இதைத் தொடர்ந்து நகராட்சியில் கடந்த 10 வருடங்களாக நிரந்தர பணியாளராக பணியாற்றி வரும் ராமர் என்பவர், தன்னுடைய வேலை பளுவை குறைப்பதற்காக சொந்த செலவில் டிரை சைக்களில் பாரம் ஏற்ற பயன்படுத்தப்படும் பகுதியை, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இணைத்து குப்பைகளை சேகரித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து ரூ. 20 ஆயிரம் மதிப்பீட்டில் இவர் வாங்கியுள்ள டிரை சைக்கிள் மூலம் சுமார் 200 கிலோ எடையுள்ள குப்பைகளை எடுத்துச் செல்ல முடியும் என்ற ராமர், இதனால் தன்னுடைய சிரமம் குறைவதுடன், வேலையும் விரைவில் முடித்து விடுவதாகவும் தெரிவித்தார்.
image
ராமரின் இந்த முயற்சியை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி மற்றும் சக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்ததுடன், பொன்னாடை அணிவித்து மரியாதையும் செலுத்தியிருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.