வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவளம்: ஜிஎஸ்டி.,யை அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கேரளா மாநிலம் கோவளம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 30 வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகைக்கான காலத்தை மேலும் நீட்டிப்பதுடன், நிலுவைத்தொகையை மாநிலஙகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அதிவேக ரயில் போக்குவரத்து பாதையை ஏற்படுத்த வேண்டும். சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்குவதுடன், தமிழகம் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலஙகளுடன் இணைக்கும் வகையில் ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதுடன், வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அனுமதி வழங்குவது அவசியம். மின்சார திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. மழை, வெள்ள பாதிப்புக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தென் மாநில மொழிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. நாம் அனைவரும் இணைந்து,’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற பாதையில் செயல்படுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement