ஜிஎஸ்டி ரசீதுகளிலும் மோடியின் புகைப்படம் அச்சிடலாம் என ட்வீட் செய்து நிரமலா சீதாராமனை சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
மக்களின் பணத்தை ஒருவரின் தொண்டாக குறிப்பிடுவது நியாயமானது அல்ல, அபத்தமானது என சீதாராம் யெச்சூரி ட்வீட். தெலங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததால் மாவட்ட ஆட்சியரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இதுகுறித்து சீதாராம் யெச்சூரி, ‘ஒருவேளை ஜிஎஸ்டி ரசிதுகளிலும் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போல; மக்களின் பணத்தை ஒருவரின் தொண்டாக குறிப்பிடுவது நியாயமானது அல்ல, அபத்தமானது. இங்கு எதுவும் இலவசம் இல்லை. இந்தியர்கள் அனைவரும் வரி செலுத்துகிறார்கள்’பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட் பலரால் பகிரப்பட்டு வருகிறது.