இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் புதிதாக வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.
அதேபோல் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் தொகையின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஜூலை மாதத்தில் கிரெடிட் கார்டுகள் செலவினங்கள் 6.4% உயர்ந்திருப்பதாகவும் மொத்தம் 1.16 லட்சம் கோடி ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்..!
கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை
கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது என
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவித்துள்ளன. கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் இருந்து 3.1 சதவீதம் அதிகரித்து ஜூலையில் 23.5 கோடியாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய கிரெடிட் கார்டு
மேலும் புதிய கிரெடிட் கார்டு வழங்கல்களின் வேகம் ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது என்றும், ஜூலை மாத இறுதியில் நிலுவையில் உள்ள கார்டுகளின் எண்ணிக்கை மாதத்திற்கு 1.95 சதவீதம் அதிகரித்து 8.03 கோடியாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முக்கிய வங்கிகள்
டிபிஎஸ் வங்கி, எஸ்பிஎம் வங்கி, ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவை ஜூலை மாதத்தில் கிரெடிட் கார்டு அதிகமாக வழங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுப்பட்டியல் தெரிவித்துள்ளது.
செலவினங்களில் அதிகரிப்பு
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் செலவினங்கள் ஆகிய இரண்டுமே உயர்ந்து வருகிறது. நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் நுகர்வோர் வாங்கும் திறன் அதிகரிப்பு ஆகியவைகளும், இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளின் அதிகரிப்பும் கிரெடிட் கார்டு செலவினங்கள் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.
விமான பயணம்
விமான பயணம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி, வணிகப் பயணங்களின் அதிகரிப்பு ஆகியவைகள் மூலம் கிரெடிட் கார்டு செலவினங்கள் அதிகரித்துள்ளது.
எதிர்கால செலவினங்கள்
வரும் காலங்களில் கிரெடிட் கார்டு செலவினங்கள் அதிகமாக இருக்கும் என்றும், குறிப்பாக பண்டிகை காலங்களில் பயணம் மற்றும் செலவுகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளின் காரணமாக கிரெடிட் கார்டு செலவினங்கள் அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலிடத்தில் HDFC வங்கி
HDFC வங்கி கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை மற்றும் கிரெடிட் கார்டு செலவுகள் இரண்டிலும் முதல் இடத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் கிரெடிட் கார்டு செலவினங்களில் 28.4 சதவீத சந்தை பங்கை இவ்வங்கி கொண்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான கிரெடிட் கார்டு செலவுகள் ரூ.2,845 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரத ஸ்டேட் வங்கி
HDFC வங்கியை அடுத்து பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் அதிகம் ஈடுபட்டுள்ளது.
Credit card spends touch record high of ₹1.16-lakh crore in July
Credit card spends touch record high of ₹1.16-lakh crore in July | ஜூலையில் கிரெடிட் கார்டு செலவினங்கள்.. முதல் இடத்தில் இந்த வங்கி தான்!