இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அடுத்தது முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.
நாட்டிலேயே முதல் நிறுவனமாகக் கொரோனா காலத்தில் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்த நிலையில், தற்போது முதல் நிறுவனமாக அனைத்து ஊழியர்களையும் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் எனக் கட்டுப்பாட்டை முன் வைத்துள்ளது. இந்த நிலையில் பிர முன்னணி ஐடி நிறுவனங்களுடன் சேர்ந்து moonlighting கொள்கையை எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில் டிசிஎஸ் தற்போது தனது ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பள உயர்வு குறித்து முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஐடி சேவை நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் தற்போது அமெரிக்கா பொருளாதாரத்தின் மந்த நிலை பாதிப்புக் காரணமாக லாபத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையைச் சமாளிக்கப் பல புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறது. இதில் முக்கியமான ஊழியர்களுக்கு அளிக்கும் வேரியபிள் பே தொகையில் கை வைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது சம்பள உயர்வில் கைவைத்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது ஊழியர்களுக்கான முதல் வருட சம்பள உயர்வை இனி வழங்காது என்றும், வருடம் வருடம் நடக்கும் அப்ரைசல் சைக்கிளில் தான் சம்பள உயர்வு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டிசிஎஸ் சம்பள உயர்வு
அதாவது டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயில், நடப்பு நிதியாண்டில் யாரெல்லாம் ஒரு வருட பணியை முடித்துள்ளீர்களே, அவர்களுக்கான சம்பள உயர்வு இப்போது அளிக்கப்படமாட்டாது. அவர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த அப்ரைசல் சைக்கிளில் தான் நடக்கும், அதாவது மார்ச் மாதம் தான் அளிக்கப்படும்.

சம்பள உயர்வு கட்
இதன் மூலம் மார்ச் மாதத்திற்கு முன்பு ஒரு வருடத்தை முடித்தவர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்காது என டிசிஎஸ் தனது ஈமெயில் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த முடிவை டிசிஎஸ் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவில் ஏற்பட்டு உள்ள பாதிப்பைக் குறைக்க இந்த முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை
அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலையால் இந்திய ஐடி நிறுவனங்கள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்ப்பாக்கப்படும் வேளையில் பொருளாதார வல்லனர்கள் அவ்வளவு மோசமாக இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.

ஊதியச் செலவு
அமெரிக்கப் பொருளாதார மந்த நிலையால் ஐடி துறையில் இருக்கும் அதிகப்படியான ஊதியச் செலவுகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்ற போன்ற முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

புதிய வர்த்தகம்
இவை இரண்டும் இந்திய ஐடி நிறுவனங்களுக்குக் கிடைக்கும் புதிய வர்த்தகங்களின் எண்ணிக்கை குறைவதன் வாயிலாக இது சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வர்த்தகம் குறைத்தலால் கட்டாயம் வருவாய், லாப அளவுகள் குறையும். இதை எதிர்கொள்ளத் தான் சம்பள உயர்வு, வேரியபிள் பே குறைக்கப்பட்டு வருகிறது.
TCS: No first-year hikes increments only annual appraisal cycle
TCS: No first-year hikes increments only annual appraisal cycle டிசிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. முதல் வருட சம்பள உயர்வு கட்..!