ஹார்மோன்கள் சுரந்து, உடலை இனப்பெருக்கத்துக்குப் பக்குவப்படுத்துற வயசு டீன் ஏஜ். ஹார்மோன்கள் சுரப்பினால பிள்ளைங்க உடம்புக்குள்ளேயும், வெளியேயும் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.
டீன் ஏஜ், அவங்க உடம்புல நிறைய அழகியல் மேஜிக்ஸ் செய்யும். அந்த ஏஜ்ல உலகமே நம்மளை வியந்து பார்க்குதுன்னு நினைச்சுப்பாங்க.
டிரஸ்ஸிங், பேச்சுன்னு எதிர்பாலினரை ஈர்க்கிறதுக்கு நிறைய மெனக்கெடுவாங்க. இந்த இனக்கவர்ச்சியை பின்னாடி இருந்து இயக்குறது காமம்தான்.
டீன் ஏஜ்க்கே உரிய இனக்கவர்ச்சியில தடுமாறிட்டு இருக்கிறப்போ, அவங்க குடும்பம் `இந்த வயசுல இது சகஜம்தான். இந்த இனக்கவர்ச்சியை இப்படித்தான் கிராஸ் பண்ணணும்’னு சொல்லித் தராது. நிஜத்துலேயும் பெரும்பான்மை வீடுகள்ல இதுதான் நிலைமை.
அந்தக் காலத்துல டீன் ஏஜின் ஆரம்பத்துல கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்களே… அப்படின்னா, டீன் ஏஜ்ல காமம் வரும்கிறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குதானே?
நாகரிகமா மாற ஆரம்பிச்சதும், இருபாலருமே கல்வி, வேலைன்னு அடுத்தடுத்தகட்டங்களை நோக்கி நகர ஆரம்பிச்சாங்க. இந்த நேரத்துலதான் டீன் ஏஜ்ல வர்ற காம உணர்ச்சி தப்பா தெரிய ஆரம்பிச்சது.
டீன் ஏஜ் பிள்ளைகள் சிலர் தங்களோட காமத்தைக் கட்டுப்படுத்திட்டு படிப்பு, கரியர்னு கடந்திடுறாங்க. இந்த மெச்சூரிட்டி காலேஜ் படிக்கிறப்போ வேணும்னா வரலாமே தவிர, ஸ்கூல் படிக்கிற காலத்துல வர்றது ரொம்ப குறைச்சல். அதனால சிலர் இந்தச் சுழல்ல சிக்கிக்கிறாங்க.
அவங்களை அசிங்கப்படுத்தாம, அந்தச் சுழல்ல இருந்து மீட்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தான் இருக்கு. கூடவே சமூகத்துக்கும்.
படிப்பு, வேலைக்கு நடுவிலே டீன் ஏஜ் இனக்கவர்ச்சியை காதலா மெயின்டெய்ன் செஞ்சு, அதைத் திருமணத்துல முடிக்கிறவங்க இருந்தாலும், அவங்களோட எண்ணிக்கை ரொம்ப குறைச்சல்தான்.
காமத்தைதான் காதல்னு நாமதான் ரொமான்டிசைஸ் பண்ணிட்டிருக்கோம். காமம், கேக் மாதிரின்னா, அதுக்கு மேல இருக்கிற கிரீமும் செர்ரியும் தான் காதல்.
இதைப் புரிஞ்சுகிட்டா, டீன் ஏஜ்ல வர்ற காமத்தையும் இது இயல்பான ஒண்ணுதானேன்னு லைட்டா எடுத்துக்கிட்டு பாதுகாப்பா கடந்திடுவீங்க.