டெல்லி ரயில் நிலையம் புது அவதாரம்

புது டெல்லி: விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், அலுவலகங்கள் என டெல்லி புதுப்பொலிவு பெற்று வருகிறது. இங்குள்ள பிரமாண்ட ரயில் நிலையம் நாட்டில் மிகவும் பழமையானது. இங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்துக்கு புதிய வடிவம் கொடுக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. புதிய கட்டிட வடிவமைப்பு, நவீனமயம், பயணிகளுக்கான பல வசதிகள் என  உலக தரத்துக்கு இது மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இந்த ரயில் நிலையத்தின் புதிய வடிவமைப்புக்கான படங்களை டிவிட்டரில் ரயில்வே வெளியிட்டுள்ளது. இப்பணி எப்போது தொடங்கப்படும், எப்போது முடியும், புதிய ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் என்னென்ன என்ற விவரங்களை ரயில்வே இன்னும்  வெளியிடவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.