உளுந்தூர்பேட்டை அருகே தபால் துறை அலுவலக பெண் ஊழியர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட கணேசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சு. 23 வயதான இவர், தபால்துறை அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காலையில் இருந்து அவரது வீடு திறக்கப்படாத நிலையில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அஞ்சு மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டநிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், அஞ்சுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
