திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் தங்கம் சிக்கியது. 57 பயணிகளிடம் நடத்திய சோதனையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
