திருப்பதி பர்டு மருத்துவமனையில் இலவச பிளவு உதடு, பிளவு அண்ண அறுவை சிகிச்சை-சிறப்பு மருத்துவர் தகவல்

திருமலை : திருப்பதி பர்டு மருத்துவமனையில் இலவச பிளவு உதடு, பிளவு அண்ண அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று சிறப்பு மருத்துவர் ரெட்டப்பரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாலாஜி அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு நிறுவனம்(பர்டு) மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் எலும்பு, தசை முறிவு உள்ளிட்ட சிகிச்சை இலவசமாக  அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உதடு பிளவு மற்றும் அண்ண பிளவு அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக செய்யப்படும் என மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ரெட்டப்பரெட்டி தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிகிச்சை பெற விரும்புபவர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவில்  பெயர்களை பதிவு செய்யலாம்’ என கூறப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.