பாராளுமன்றத்தில் நிலநடுக்கத்தின்போது ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து விவாதம் நடந்த போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீன் நாட்டில் நிலநடுக்க சேதங்களுக்கு காப்பீடு குறித்த விவாதம் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விவாதம் குறித்து ஆலோசனையில் அந்நாட்டின் எம்பிக்கள் ஈடுபட்ட போது திடீரென பாராளுமன்ற கட்டிடம் நிலநடுக்கத்தால் அதிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடனில் மிதக்கும் கௌதம் அதானி.. மொத்தம் எத்தனை கோடி தெரியுமா..?
லிச்சென்ஸ்டீன் நாடு
மேற்கு ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீன் என்ற நாட்டில் நிலநடுக்க சேதத்திற்கு காப்பீடு கட்டாயமாக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்நாட்டின் எம்பிகள் கூடினர்.
நிலநடுக்கம்
லிச்சென்ஸ்டீன் நாட்டின் முற்போக்கு குடிமக்கள் கட்சியைச் சேர்ந்த பெட்டினா பெட்ஸோல்ட்-மஹர் இதுகுறித்து பேசினார். அப்போது திடீரென நாடாளுமன்ற கட்டிடம் நிலநடுக்கத்தால் அதிர்ந்தது. சமூக ஊடகங்களில் இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாதியில் ரத்தான கூட்டம்
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பெட்டினா பெட்ஸோல்ட்-மஹர் சில நொடிகள் கழித்து மீண்டும் தனது உரையை தொடர்ந்தார். ஆனால் இரண்டாவது முறை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பார்லிமென்டையே அதிர வைத்தது. இதனையடுத்து லிச்சென்ஸ்டீன் நாடாளுமன்றத்தின் தலைவர் ஆல்பர்ட் ஃப்ரிக், கூட்டத்தை ரத்து செய்து உடனடியாக எம்.பி.க்கள் அனைவரும் வெளியேறும்படி கேட்டு கொண்டார்.
ரிக்டர் அளவு
செப்டம்பர் 1 ஆம் தேதி லிச்சென்ஸ்டைன் நாட்டில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் 2.4 மற்றும் 3.9 ரிக்டர்களுக்கு இடையில் இருந்தது என்று யூரோநியூஸ் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின்படி, ஆஸ்திரியாவின் டோர்ன்பிர்னுக்கு தெற்கே 19 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சேதம் இல்லை
செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், லிச்சென்ஸ்டைன் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக யாருக்கும் காயங்கள் இல்லை என்றும், அதேபோல் சொத்து சேதங்கள் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tremors interrupt this country’s parliament debate on earthquake insurance
Tremors interrupt this country’s parliament debate on earthquake insurance | நிலநடுக்க சேதங்களுக்கு காப்பீடு.. பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது நிகழ்ந்த நிலநடுக்கம்