நேஷனல் ஹெரால்டு நாளேடு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அமலாக்கத் துறை கண்காணிப்பில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியால் 2013ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1938ஆம் ஆண்டு இந்தப் பத்திரிகையை தொடங்கினார். அப்போதே இந்தச் செய்தித் தாளின் நிதி தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தப் பணிகளுக்கு வட இந்தியாவில், நிதி திரட்டியவர்களில் முக்கியமானவர் சந்திர பானு குப்தா. உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்த பெருமைக்குரியவர். இவரும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் நிதியுதவிகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
இவர் தனது நினைவுக் குறிப்பில், “எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பத்திரிகை நேரு குடும்ப பத்திரிகை போன்றே செயல்படுகிறது. நேஷனல் ஹெரால்டு குறித்து விசாரணை நடத்தினால் பெரிய உண்மைகள் வெளிவரும்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் கொள்கை, நேரு அல்லது அவரது குடும்பம் குறித்து கேள்வியெழுப்பும் நபர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுவதுதான். இந்தப் பத்திரிகை முதலில் நேரு சொத்தாகவும் பின்னாள்களில் இந்திரா காந்தி சொத்தாகவும் கருதப்பட்டு வந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தகம் குப்தாவின் இறப்புக்கு பின்னர், கடந்தாண்டு நமன் பிரகாஷனால் கடந்தாண்டு வெளியிடப்பட்டது. சந்திர பானு குப்தா, 1960களில் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் 1963இல் கு. காமராஜர் திட்டத்தினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கு. காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு, கே. ப்ளான் அறிமுகப்படுத்தப்பட்டது. மூத்தத் தலைவர்கள் கட்சிப் பணிக்கு திரும்பினர்.
இந்தத் திட்டத்தை நேருவிடம் கு. காமராஜர் முன்மொழிந்த பின்னர் பதவியில் இருந்து இறங்கிய குப்தா, பின்னர் மீண்டும் மார்ச் 14, 1967 முதலமைச்சர் ஆனார்.
இதற்கிடையில் சரண் சிங் காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார். இதனால் குப்தா ஏப்ரல் 2, 1967இல் பதவியில் இருந்து இறங்கினார்.
பின்னர் மூன்றாவது முறையாக குப்தா பிப்ரவரி 26,1969இல் முதலமைச்சர் ஆனால். ஆனால் ஓராண்டுக்கு முன்னதாக கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக குப்தாவும் வெளியேற்றப்பட்டார்.
குப்தா தனது புத்தகத்தில் தி நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எவ்வாறு நிதி திரட்டப்பட்டது என்பது குறித்து விவரித்துள்ளார். 1938இல் லக்னோவில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தனது பயணத்தை தொடங்கியது.
பின்னர் இந்தி பதிப்பான நவ்ஜீவன் மற்றும் உருது வெளியீடான குவாமி அவாஸ் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக குப்தா தனது புத்தகத்தில், “நாங்கள் அனைவரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு பங்கு சேகரித்தோம்.
இதில் நான், ஆச்சர்யா நரேந்திர தேவ், ஸ்ரீ பிரகாஷ் மற்றும் சிவ பிரகாஷ் குப்தா எனப் பலர் அடங்குவார்கள். முதலில் நேரு 100 பங்குகளை வாங்கினார். பின்னர், அதன் இயக்குனர் என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தும் பணம் எடுக்கப்பட்டது. பல தலைவர்களும் பண உதவி அளித்தனர்” எனக் கூறியுள்ளார். மேலும், “ஆகஸ்ட் 15, 1947 வரை ஜிபி பந்த் தலைமையிலான இரண்டு நிர்வாகங்களில் மாநில வருவாய் அமைச்சராக இருந்த ரஃபி அகமது கித்வாய், தாலுகாதார் குடும்பங்களிடம் பணம் வசூலித்ததாகவும், அதில் ஒரு பகுதி நேஷனல் ஹெரால்டுக்கு வழங்கப்பட்டதாகவும்” கூறியுள்ளார்.
இது தவிர குப்தா தனது புத்தகத்தில், “ஜூலை 13, 1966 அன்று அவரது 65ஆவது பிறந்தநாளில் அவரது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் ரூ. 36 லட்சம் பரிசளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது 1967 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு நிகழ்ந்துள்ளது. மாநில காங்கிரஸில் உள்ள தனது போட்டியாளர்கள் எச்.என். பகுகுணா, கம்லாபதி திரிபாதி மற்றும் கோவிந்த் சஹாய் ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சியின் மத்திய தலைமையிடம் புகார் அளித்ததாகவும், காமராஜ் அவர் மீது கோபமடைந்ததாகவும் குப்தா கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டின் அப்போதைய நிர்வாக ஆசிரியர் உமா ஷங்கர் தீட்சித் – மத்திய அமைச்சராகி, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றிய காங்கிரஸ் பிரமுகர் ஆவார். இவர், இந்திரா காந்தி பணத்தில் ஒரு பகுதியை பேப்பருக்கு வழங்க விரும்புவதாக தன்னிடம் கூறியதாக குப்தா எழுதியுள்ளார்.
ஆனால் அவர் மறுத்துவிட்டார் என்று குப்தா கூறினார், மேலும் தீக்ஷித் இந்த கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்பு 36 லட்ச ரூபாய்க்கு வரி செலுத்துவது குறித்து வருமான வரித்துறை நோட்டீஸ் பெற்றிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஒரு கட்டத்தில் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் இந்திரா காந்தியின் ஊதுகுழலாக மாறியது. இதனால், இந்திரா காந்தியின் விருப்பங்களை நிறைவேற்ற நான் தயாராக இல்லை. என்னிடம் கொடுக்க பணமும் இல்லை என்றும் குப்தா கூறியுள்ளார்.
காங்கிரஸில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அப்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் கு. காமராஜர் தலைமையிலான அணியில் நின்றுள்ளார்.
பின்னாள்களில் இந்திரா கைகளுக்கு கட்சி செல்ல பதவியை இழந்த குப்தா ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். 4 முறை முதலமைச்சராக இருந்த குப்தா, மார்ச் 11,1980இல் இறந்தார்.
இவர் ககோரி ரயில் கொள்ளை வழக்கில் வழக்குரைஞராகவும் செயல்பட்டவர் ஆவார். நேஷனல் ஹெரால்டு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, நேருவின் கையெழுத்தில், “சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. அதை உங்கள் முழு பலத்துடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என மேற்கொள் காட்டப்பட்டது.
தற்போதைய பிரச்னை
ஆனால் இது இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தில் திரும்ப பெறப்பட்டது. தொடர்ந்து பத்திரிகை லக்னோ மற்றும் டெல்லியில் இருந்து வெளியானது. இந்தப் பத்திரிகை 2008இல் நிறுத்தப்பட்டது.
பின்னர் 2016இல் பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது, பண மோசடி புகாரை பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுப்பினார்.
இதற்கிடையில் நேரு-காந்தி குடும்பங்களை பாதுகாக்கும் வகையில், கட்சியின் மூத்தத் தலைவர் அபிஷேக் சிங்வி, “பத்திரிகை வெளியீட்டு நிறுவனம் நீண்ட நாள்களாக நஷ்டத்தில் இயங்கி வந்தது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் யங் இந்தியா லாப நோக்கமற்ற இயக்கமாக இருப்பதால் இதில் முதலீடு செய்தது, இதில் இருந்து ஒரு பைசா கூட எடுக்க முடியாது எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”