வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதுவரை அந்த இடத்தில் இருந்த பிரிட்டன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச நிதியம் எனப்படும் ஐஎம்எப் அமைப்பானது, வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பு அளவில் எடுத்த பொருளாதார வளர்ச்சி கணக்கில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனியை தொடர்ந்து இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது. இந்திய பங்குச்சந்தைகளிலும் உயர்ந்து வருகிறது. கடந்த காலாண்டு நிலவரப்படி பிரிட்டன் பொருளாதாரம் 814 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் 854.7 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது.
பிரிட்டனில், பிரதமர் மாற்றம் ஏற்பட உள்ள நிலையில், அந்நாடு 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்கும் பிரதமருக்கு, 4 தசாப்தங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது 2024 இறுதி வரை நீடிக்கும் அபாயம் உள்ளதாக பிரிட்டன் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.இதற்கு மாறாக இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டில் 7 சதவீதத்திற்கு மேலும் வளரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement