ஹரியானாவில் ரோட்டக்கில் இருந்து தோஹனா போய்க் கொண்டிருந்த இளம் பெண் ஃபத்தேபாத் அருகில் ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு உயிரிழந்தார்.
மகனுடன் பயணித்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற அவன் அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவித்ததால் ரயிலை விட்டு தள்ளியதில் அந்தப் பெண் உயிரிழந்தார்.
சிறுவன் தந்தைக்கு போன் செய்து தகவல் கூற போலீசார் உதவியுடன் ரயில் தண்டவாளத்தில் கிடந்த உயிரற்ற பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தப்பிச் செல்ல ஓடும் ரயிலில் இருந்து குதித்த அவனும் காயங்களுடன் கைது செய்யப்பட்டான்.