ரஷ்ய பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க செய்யலாம் என்ற மோசமான கனவு மேற்கத்திய நாடுகளுக்கு
ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் நகர்வுகள் அனைத்தும் மனித குலத்திற்கே ஆபத்தாக முடியும்
ரஷ்யாவை துண்டாட திட்டமிடும் மேற்கத்திய நாடுகள் மரணத்துடன் சதுரங்க விளையாட்டு ஆடுவதாக முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மெத்வெதேவ் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் நகர்வுகள் அனைத்தும் மனித குலத்திற்கே ஆபத்தாக முடியும் என கூறியுள்ள முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மெத்வெதேவ்,
உக்ரைன் படையெடுப்பை சாதகமாக பயன்படுத்தி ரஷ்ய பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க செய்யலாம் என்ற மோசமான கனவு மேற்கத்திய நாடுகளுக்கு இருக்கும் என்றால் அது வெறும் கனவு தான் என்றார்.
@ap
அமெரிக்காவும் அதன் வால்களும் ரஷ்யாவை துண்டாட முயன்று வருகிறது. 1991ல் சோவியத் ரஷ்யாவை துண்டாடியது போல் எளிதல்ல தற்போதைய சூழல் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மெத்வெதேவ் குறிப்பிட்டுள்ளார்.
தங்களிடம் இருக்கும் அணுஆயுதங்களே தங்களின் பாதுகாப்பு அரண் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2008 முதல் 2012 வரையில் ரஷ்யாவின் ஜனாதிபதி பொறுப்பில் இருந்தவர் மெத்வெதேவ்.
@ap
அந்த காலகட்டத்தில் தற்போதை ஜனாதிபதி புடினை விட மேற்கத்திய நாடுகள் அவரை மிகவும் தாராளவாதியாகப் பார்த்தன.
ஆனால் சமீபத்திய மாதங்களில், ஜனாதிபதி புடினின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியில், பெரும்பாலான ரஷ்ய அதிகாரிகளை விடவும் மெத்வெதேவ் மிகவும் உக்கிரமாகவும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
@epa