“மோடி படத்தைத்தானே கேட்டீங்க… இந்தாங்க!” – நிர்மலா சீதாராமனுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி!
ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படத்தை வைக்குமாறு வலியுறுத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி நூதனமான பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்துள்ளது.
‘ரேஷன் கடையில் மோடி படம் எங்கே..?’
* தெலங்கானா மாநிலத்துக்கு நேற்று சென்ற நிர்மலா சீதாராமன், காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
* அப்போது அங்குள்ள பேனரில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம் கடிந்துகொண்டார்.
* இனிமேல் மோடி படத்தை வைப்பதோடு மட்டுமல்லாது, அந்தப் படம் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறினார்.
கண்டனங்களும்… கேள்விகளும்
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்வை படம் பிடித்த ஒருவர் அதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட, சில நிமிடங்களில் இது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த செயலுக்கு டிஆர்எஸ் உள்பட் பல்வேறு கட்சிகள் தரப்பிலிருந்து கண்டனங்கள் வெளியாகின. மேலும் சட்டத்தின் எந்த விதியில் பிரதமரின் படம் வைக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.
* ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரும் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டனர்.
தெலங்கானா அரசின் டிஜிட்டல் மீடியா இயக்குநர் கொனாதம் திலீப்,
* “ இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில், ரேஷன் கடைக்கு முன்பாக மத்திய அரசின் நிதி மற்றும் மாநில அரசின் நிதி தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாடம் நடத்தி உள்ளார்.
* ரேஷன் கடை முன் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று அவர் கோருவது அவமானத்தின் உச்சம். எந்த விதி மற்றும் சட்டத்தின் கீழ் அவர் இவ்வாறு கூறுகிறார்?
* உணவு உரிமை என்பது அரசியலமைப்பின் 21 வது பிரிவின்படி ஒரு அடிப்படை உரிமையாகும் மற்றும் பிரிவு 32 இன் படி சட்டப்படி செயல்படுத்தப்படுகிறது.
அது அரசின் கடமை… உதவி அல்ல!
* இந்த நாட்டு மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவது என்பது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் கடமையே தவிர, மத்திய அரசு தனது குடிமக்களுக்குச் செய்யும் உதவி அல்ல.
* நாடு முழுவதும் உணவு தானியங்களை பொது விநியோக முறை மூலம் விநியோகிக்கும் நோக்கத்துடன்தான் இந்திய உணவுக் கழகம் 1964 -ம் ஆண்டு நிறுவப்பட்டது.
* உணவுக்கான உரிமை மோடி ஜிக்கு முன்பும் இருந்தது, மோடி ஜிக்குப் பிறகும் தொடரும்…” என அவரும் தனது பங்குக்கு காட்டமான பதிலடியைக் கொடுத்தார்.
‘தெலங்கானாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’
* மேலும், ” தெலங்கானா மாநிலம் மத்திய அரசுக்கு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் 46 காசுகள் மட்டுமே திரும்ப கிடைக்கிறது.
* எனவே பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் ‘ தெலங்கானாவுக்கு நன்றி’ என பேனர் வைக்க இதுவே சரியான தருணம் மேடம்.
மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் மக்களால், மக்களுக்காக வழங்கப்படுகிறது. அந்த பணம் அவரது சொந்த பணமோ அல்லது மோடியின் பணமோ இல்லை என்று யாராவது அவரிடம் கூறுங்கள்..!” என்றும் அந்தக் கட்சி தரப்பில் கருத்துகள் பதிவிடப்பட்டன.
சமையல் சிலிண்டரில் மோடி படம் ஒட்டி பதிலடி
இதற்கெல்லாம் உச்சமாக, நிர்மலா சீதாராமன் ரேஷன் கடையில் மோடியின் படத்தை வைக்கச் சொன்னதற்காக, அம்மாநிலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி, அதில் விலை ரூ. 1,105 என்று டி.ஆர்.எஸ். கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
இவ்வாறு புகைப்படம் ஒட்டப்பட்ட சிலிண்டர்களுடன் செல்லும் வாகனத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூடவே மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, “அனைத்து மாநிலங்களுமே ரேசன் பொருட்களை வழங்கி வருகின்றன. ஆனால், இதற்கான கிரெடிட்டை மத்திய அரசு எடுத்துக்கொண்டு அரசியல் செய்து வருகிறது” என்று பேசிய வீடியோவையும் நிர்மலா சீதாராமனி ரேஷன் கடை வீடியோவுடன் சேர்த்துப் பதிவிட்டு வருகின்றனர்.
பாஜகவின் விளக்கமும் கேள்வியும்
அதே சமயம், மோடி படத்தை ரேஷன் கடையில் வைக்குமாறு நிர்மலா சீதாராமன் கூறியதில் தவறு ஏதுமில்லை என்று கூறியுள்ள தெலங்கானா பாஜக,
* ” ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கேள்வி கேட்பதில் என்ன தவறு? எளிமையான கேள்விகளைக் கேட்பது இதற்கு முன் நடக்காத ஒன்றா..?
* ஒரு ஐஏஎஸ் அதிகாரி மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவர்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்வின் நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியரிடமும், செய்தியாளர்களிடம் என்ன பேசினார், மற்றும் இது தொடர்பாக முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகனும் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்களில் ஒருவருமான கே.டி.ராமராவ், நிர்மலா சீதாராமனைச் சாடி என்ன கூறினார் என்பது குறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…
டெல்லிக்கு இடமாறும் அதிமுக சண்டை… பொதுக்குழு விவகாரத்தில் இனி அடுத்து என்ன?!
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி முகாமில் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலையச் செயலாளராக வேலுமணி, அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் நியமனங்களும் செல்லும். அதே சமயம் எடப்பாடி பழனிசாமியால் செய்யப்பட்ட நீக்கங்களும், நியமனங்களும் செல்லத்தக்கதாகி உள்ளன.
இந்தத் தீர்ப்பால் பன்னீர் தரப்பு மொத்தமாக உடைந்துபோயிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான விவாதம் பன்னீர் முகாமில் தொடங்கியிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் இனி அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…
ஜெ., மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணைய அறிக்கைகள்: அதிமுக-வுக்கு நெருக்கடியா?!
“முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதைத் தற்போது சொல்ல மாட்டோம். அந்தப் பிரச்னையை சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து, சட்டமன்றத்தின் மூலமாகவே முறையான நடவடிக்கையை எடுப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன். அதேபோல தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய விசாரணை அறிக்கை மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.
உட்கட்சி பூசல், கொடநாடு வழக்கு என பல நெருக்கடிகளை சந்தித்துவரும் அதிமுக-வுக்கு, இந்த இரு அறிக்கை குறித்து முதல்வர் பேசி இருப்பது மேலும் தலைவலியை ஏற்படுத்துமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
நித்தியானந்தாவுக்கு இலங்கையில் அடைக்கலம் கோரப்படுகிறதா..? கைலசா கடித ரகசியம்!
பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவிலிருந்து தலைமறைவாகினார். பின்னர், கைலாசா என்ற தனித்தீவு வாங்கி அங்குக் குடியேறிவிட்டதாக அவரே அறிவித்தார்.
சமீபத்தில் அவர் உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்துவிட்டதாக கூட தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில், நித்தியானந்தாவுக்கு இலங்கையில் அடைக்கலம் கோரி கைலசாவிலிருந்து கடிதம் வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த முழுமையான செய்தியைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…
கண்ணீருடன் விடைபெற்ற செரீனா வில்லியம்ஸ்! – நெகிழ்ச்சியான தருணங்கள்..!
முன்னரே அறிவித்தது போல 27 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவானாக வலம் வந்த செரீனா வில்லியம்ஸின் பயணம் நிறைவு பெற்றது. அவரது சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்குப் பிரியா விடை கொடுத்தனர்.
நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…
மிஸ்டர் மியாவ்: அஜித் படத்துக்கே இந்த நிலையா?
எப்போதுமே நடிகர் சூர்யாவுக்கு எதிரான ஒரு கூட்டம் கோடம்பாக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டேயிருக்கும். சூர்யாவுக்கு எதிரான கலக வேலைகளைக் கிளப்பிக்கொண்டேயிருக்கும். அந்த வகையில் ‘சூர்யாவுக்குக் கொடுக்கப்பட்ட தேசிய விருதைத் திரும்பப் பெற வேண்டும்’ எனச் சொல்லி டெல்லிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள் தமிழ் நாட்டுப் புண்ணியவான்கள் சிலர்…
மேலும், ‘ வெயிட்டிங்கில் அஜித் படம்’, ‘திருச்சிற்றம்பலம் செய்த மேஜிக்’, ‘கை கொடுத்து உதவிய வருத்தப்படாத நடிகர்’… என மிஸ்டர் மியாவ் தரும் சுவாரஸ்ய சினிமா தகவல்களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…