துபாய்:’இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை அளிக்கும் வகையில், இரு தரப்பு உறவு மேலும் வலுப்பட வேண்டும்’ என, யு.ஏ.இ., அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுட்டுள்ளார்.
மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். இந்தியா – யு.ஏ.இ., கூட்டுக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் ஜையது அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.
அப்போது யு.ஏ.இ., அதிபருக்கு, நம் பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தை கொடுத்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியா மற்றும் யு.ஏ.இ., இடையேயான நட்புறவு மிகவும் சிறப்பாக உள்ளது; ராணுவ ரீதியிலும் ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது. இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பரம் நன்மை அளிக்கக் கூடிய பொதுவான விஷயங்களில், நம் உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement